பிச்சை எடுப்பேன்னு அம்மா நினைச்சாங்க! உண்மையை போட்டுடைக்கும் ஷிவின் கணேஷன்..!
பிக்பாஸ் வீட்டில் கொடுக்கபட்ட டாஸ்க்கை நிறைவு செய்வதற்காக பல உண்மையை போட்டுடைக்கும் போட்டியாளர்களின் ப்ரொமோ வீடியோ ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
பிக்பாஸ் 6 தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் முக்கிய போட்டியாளராக ஜனனி, ஜிபி முத்து காணப்படுகின்றனர்.
இதிலுள்ள 21 போட்டியாளர்களில் கிட்டத்தட்ட 8 நபர்களுக்கு மேல் இந்த வார எலிமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ப்ரோமோ
இந்நிலையில் லக்ஸரி பட்ஜெட் கதை சொல்லும் டாஸ்கில் வாய்ப்பு ஷிவின் கணேசனுக்கு கிடைத்துள்ளது.
இதில் “அவர் ஒரு திருநங்கையாக இருப்பதால் அவர் பிச்சை எடுத்துவிடக்கூடாது என்பதற்காக வெறுத்து ஒதுக்கப்பட்டதாகவும் இனிவரும் காலங்களில் இது போன்று நிலை யாருக்கும் வரக்கூடாது எனவும் கண்கலங்கியப்படி” தெரிவித்துள்ளார்.