தடைகளை தாண்டி முன்னேறும் நாள்: இன்றைய ராசிபலன்(07.02.2024)
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.
அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
1.மேஷம்
குடும்பத்தில் ஒற்றுமை கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். விருந்தினர்கள் வருகை தருவார்கள். பணப்புழக்கம் இருக்கும். மரியாதை கூடும் நாள்.
2.ரிஷபம்
உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருக்கிறது. நிறைய வேலைகளை பார்க்க வேண்டி வரும். நெருங்கியவர்கள் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். லாபம் குறைவாக காணப்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
3.மிதுனம்
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கிடைக்கும். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் நெருக்கம் காட்டுவார்கள். பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் நாள்.
4.கடகம்
குடும்பத்தில் மதிப்பு கிடைக்கும். அதிகார பதவியில் நட்பு கிடைக்கும். சொந்தங்கள் தேடி வருவார்கள். இன்று லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
5.சிம்மம்
குடும்பத்தில் வசதிகளை மேம்படுத்துவீர்கள். சேமிக்க தொடங்குவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கனவுகள் நிறைவேறும் நாள்.
6.கன்னி
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். நல்ல செய்தி வரும்.உறவுகளுடன் பிரச்சனை இருந்தால் வந்து தீரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும்.
7.துலாம்
சிலருக்கு உங்கள் உதவி தேவைப்படும். உடன்பிறப்பால் நன்மை உண்டு. பூர்வீக சொத்துக்கு தீர்வு கிடைக்கும். நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் உண்டாகும். நன்மை நடக்கும் நாள்.
8.விருச்சிகம்
கணவன் மனைவி நெருக்கமாக இருப்பார்கள். நல்ல செய்தி கிடைக்கும். நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். தடைகளால் நடக்காமல் போன வேலைகள் நிறைவடையும் நாள்.
9.தனுசு
ராசிக்குள் சந்திரன் இருக்கிறது, இதனால் செலவுகள் அதிகம் வரும். குடும்பத்தில் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க நேரிடும். விழிப்புணர்வுடன் இருக்கும் நாள்.
10.மகரம்
குடும்பம் பற்றிய கவலை நீங்கும். யாரையும் பெருமையாக கூற கூடாது. உத்தியோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
11.கும்பம்
குடும்பத்தில் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் புகழ் கிடைக்கும். சொந்தங்களால் உதவி கிடைக்கும். மனதின் பலன் அதிகரிக்கும் நாள்.
12.மீனம்
செயலில் வேகம் காட்டுவீர்கள். உடன்பிறப்பால் பயன் கிடைக்கும். உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள் உங்களை பார்ப்பார்கள். புகழ் கௌரவமாக வாழும் நாள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் |