மகர ராசிக்கு தொடங்கும் சந்திராஷ்டமம்! செயல்களில் கவனம் தேவை
மேஷம்
அசுவினி : நேற்றைய சங்கடம் விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரணி : நீங்கள் திட்டமிட்டு செயல்படும் காரியத்தில் நினைத்ததை சாதிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1 : காலையில் இழுபறியாக இருந்த ஒரு வேலை மதியத்திற்கு மேல் நடைபெறும்.
ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : துணிச்சலாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடித்துக் கொள்வீர்கள்.
ரோகிணி : மதியத்திற்கு மேல் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். கவனம் அவசியம்.
மிருகசீரிடம் 1, 2 : எந்தவொரு செயலிலும் அலட்சியம் வேண்டாம். யோசித்து செயல்படுங்கள்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : நேற்றைய எண்ணம் ஒன்று பூர்த்தியாகும். காலையில் முயற்சித்த செயல் திருப்தியளிக்கும்.
திருவாதிரை : சகோதரர்கள் வழியில் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்ப்பு லாபம் தரும்.
புனர்பூசம் 1, 2, 3 : தைரியமாக செயல்படுவீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
கடகம்
புனர்பூசம் 4 : காலையில் உங்கள் செயல்கள் இழுபறியானாலும் அதன்பின் பலிதமாகும்.
பூசம் : இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும்.
ஆயில்யம் : முந்தைய அனுபவத்தைக் கொண்டு ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள்.
சிம்மம்
மகம் : பொருளாதார நெருக்கடி விலகும். வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும்.
பூரம் : செலவுகள் கட்டுக்குள் வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
உத்திரம் 1 : கவனமுடன் செயல்பட்டு நேற்றைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதிநிலை உயரும்.
கன்னி
உத்திரம் 2, 3, 4 : அலைச்சலுடன் செலவுகளும் அதிகரிக்கும். யோசித்து செயல்படுவது நன்மையாகும்.
அஸ்தம் : உங்கள் முயற்சிகள் இழுபறியாகும். அரசு வழியில் சங்கடம் தோன்றும். கவனமுடன் செயல்படுங்கள்.
சித்திரை 1, 2 : உறவினர்களால் சங்கடம் ஏற்படும். கவனமுடன் செயல்படுவீர்கள்.
துலாம்:
சித்திரை 3, 4 : எதிர்பார்த்த பணம் இன்று வந்து சேரும். செயல்களில் நன்மையாகும்.
சுவாதி : வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.
விசாகம் 1, 2, 3 : நேற்று நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.
விருச்சிகம்
விசாகம் 4 : தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் குடும்பத்தில் ஒருவர் பாரட்டப்பெறுவார்கள்.
அனுஷம் : வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். எதிர்பார்த்தவற்றில் நன்மை அடைவீர்கள்.
கேட்டை : நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
தனுசு
மூலம் : இரண்டு நாட்களாக ஏற்பட்ட நெருக்கடி விலகும். வருமானத்தில் இருந்த தடை அகலும்.
பூராடம்: காலையில் ஏற்பட்ட குழப்பம் படிப்படியாக சரியாகும். பின்னர் தெளிவுடன் செயல்படுவீர்கள்.
உத்திராடம் 1 : கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு மறையும்.
மகரம்
உத்திராடம் 2, 3, 4 : இன்றைய கோயில் வழிபாடு உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். தர்ம சங்கடத்திலிருந்து தப்பிப்பீர்கள்.
திருவோணம் : காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயல்களில் கவனம் தேவை. அலட்சியம் வேண்டாம்.
அவிட்டம் 1, 2: புதிய முயற்சிகள் இன்று இழுபறியாகும். செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.
கும்பம்
அவிட்டம் 3, 4 : துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
சதயம் : குடும்பத்தினருடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3 : நீங்கள் மேற்கொள்ளும் செயலால் லாபம் உண்டாகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.
மீனம்
பூரட்டாதி 4 : வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
உத்திரட்டாதி : தடைபட்ட பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
ரேவதி : குடும்பத்தில் ஒருவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.