2023 புத்தாண்டு ராசி பலன் - இந்த ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகும்... யாருக்கு பணம் தேடி ஓடி வரும்!
புத்தாண்டு பிறக்கப்போகிறது. 2023ஆம் ஆண்டில் நவ கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் நிகழப்போகிறது.
முக்கிய நான்கு கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி வரிசையாக நிகழப்போகிறது. சனி பெயர்ச்சி ஜனவரி மாதம் நிகழப்போகிறது. குரு பெயர்ச்சி ஏப்ரல் மாத இறுதியில் நிகழப்போகிறது.
ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சி நிறைய பேருக்கு நன்மை செய்யப்போகிறது.
பிறக்கப்போகும் புத்தாண்டு எந்த மாதிரியான பலன்களைத் இந்த 4 ராசிகளுக்கும் தரப்போகிறது? என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக உள்ளது. காதல் வாழ்க்கையில் கவிதை பாடுவீர்கள். புதுமண தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறும் ஆசைகள் நிறைவேறும்.
இடமாற்றம் உண்டு. அந்த இட மாற்றத்தினால் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு குருவும், சனிபகவானும் நிறைய சாதகங்களை செய்யப்போகிறார்கள். குடும்ப விசயத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
காதல் வானில் சிறகடித்துப்பறக்கப்போகிறீர்கள். காதல் வெற்றிகரமாக கல்யாணத்தில் முடியும். திருமணம் முடிந்தவர்களுக்கு நெருக்கமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
மிதுனம்
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே உங்கள் வாழ்க்கையில் கிரகங்கள் புகுந்து விளையாடியுள்ளன. கண்டச்சனி, அஷ்டமத்து சனி என அடிமேல் அடி பட்டிருப்பீர்கள். இனி விடிவுகாலம் பிறக்கப்போகிறது.
கடன் பட்டு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இனி நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. ஒன்பதாம் வீட்டிற்கு சனிபகவான் வரப்போகிறார். வலி வேதனைகள் நீங்கப்போகிறது. முன்ஜென்மத்தில் செய்த புண்ணியங்களுக்கு பலன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு அற்புதங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. காரணம் மே மாதம் வரை குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.
குரு பார்த்தால் கோடி நன்மை என்பதால் வேறு எந்த வித தோஷங்களும் பாதிக்க வாய்ப்பு இல்லை. அஷ்டமத்து சனி என்றாலும் கஷ்டங்களை தர மாட்டார் மாறாக எட்டாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்கு விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறார் சனிபகவான். பணம் தேடி ஓடி வரும்.