இன்றைய நாள் அதிர்ஷ்டகரமாக இருக்கப்போவது எந்த ராசிக்கு? இதோ முழுபலன்கள்
இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.
பொதுவாக நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
அசுவினி: நண்பர் ஒருவரின் உதவி எதிர்கால நன்மைக்கு வழிகாட்டும்.
பரணி: குழந்தைகளின் மகிழ்ச்சி கருதி இன்று செலவுகள் செய்வீர்கள்.
கார்த்திகை 1: வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: பலகாலத்து நட்பின் உதவியால் நல்ல விஷயம் நடைபெறும்.
ரோகிணி: பழைய நட்பு ஒன்றைப் புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்பு நல்ல முடிவிற்கு வரும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும்.
திருவாதிரை: வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய பங்கு முறையாகக் கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: பல நாட்கள் வராதிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும்.
கடகம்:
புனர்பூசம் 4: கடன் சுமையை முனைப்புடன் பெருமளவு குறைப்பீர்கள்.
பூசம்: அழகிய, புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ஆயில்யம்: மற்றவர்கள் குற்றம் சாட்டக்கூடிய எதையும் செய்யாதீர்கள்.
சிம்மம்:
மகம்: அவசரமோ பதற்றமோ இல்லாமல் எதையும் செய்யப்பாருங்கள்.
பூரம்: சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம் ஒன்று நன்மை தருவதாக அமையும்.
உத்திரம் 1: நண்பருக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சிறு சலசலப்பு ஏற்படும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: இன்று நல்ல பலன் ஒன்று உங்களுக்கு வரப்போகின்றது.
அஸ்தம்: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உறுதி கொள்வது நன்று.
சித்திரை 1,2: நேர்மையை விடாமல் செயல்பட்டு நிம்மதி அடைவீர்கள்.
துலாம்:
சித்திரை 3,4: கொள்கைப்பிடிப்போடு செயல்படுவதில் உறுதி தேவை.
சுவாதி: குழந்தைகளுக்கு முன்னேற்றங்கள் வந்து உங்களை மகிழ்விக்கும்.
விசாகம் 1,2,3: தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய திருப்பம் ஒன்றைக் காண்பீர்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: உடல்நலம் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.
அனுஷம்: பல நாள் கழித்து பெற்றோருடன் சந்தோஷ சூழ்நிலை வரும்.
கேட்டை: தொழில் முன்னேற்றம் முன்பைவிடச் சிறப்பாகவே அமையும்.
தனுசு:
மூலம்: புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. கற்பனைக் கவலை தீரும்.
பூராடம்: குழந்தைகளின் போக்கில் மகிழ்ச்சி அளிக்கும் மாற்றம் ஏற்படும்.
உத்திராடம் 1: படிப்பிற்கேற்ற பணி கிடைக்கும். பிறருடன் அனுசரித்து செல்லவும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: பெண்கள் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.
திருவோணம்: பொழுதுபோக்கில் கவனம் செலுத்தி மகிழ்ச்சி அடைவீர்கள்.
அவிட்டம் 1,2: நாள் முழுக்க பிஸியாக இருப்பீர்கள். கவலை தீரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: வருமானம் உயர நேர்மையற்ற வழியை நாட வேண்டாம்.
சதயம்: நாளின் முற்பகுதியில் உற்சாகமான செய்தி வரும். மன அமைதி உண்டு.
பூரட்டாதி 1,2,3: பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.
மீனம்:
பூரட்டாதி 4: சிறு சங்கடம் ஒன்று ஏற்படக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: பல நாள் சந்திக்காத நபர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
ரேவதி: தன்னம்பிக்கையை கைவிட வேண்டாம். வேலைப்பளுமிக்க நாள்.