இன்றைய ராசிப்பலனில் எதிர்பாராத செல்வங்கள் தேடி வரும் ராசிக்காரர்கள் யார்?
மேஷம்
மேஷ ராசிக்கு வேலைகளில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேர வாய்ப்புள்ளது.
சொத்து வியாபாரிகளுக்கு இன்று அதிக லாபம் தரும். அதிகப்படியான செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
ரிஷபம்
ரிஷபம் ராசியினர் இன்று நீங்கள் முடிவெடுப்பதில் சாதகமான பலன்கள் அமையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
சொத்துக்கள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் வாழ்க்கை துணையுடன் சிறந்த அனுபவத்தைப் பெறலாம்.
குருவின் அருளால் செல்வத்தின் அதிபதியாக திகழும் அந்த 3 ராசியினர்கள் யார்?
மிதுனம்
மிதுன ராசியின்ர்கள் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். இந்த நேரத்தில் எந்த ஒரு சொத்து வாங்கும் முயற்சியில் இருந்தால் அதில் மிகவும் கவனமாக இருக்கவும்.
உங்கள் வருமானம் நன்றாக இருக்கும்.பணியிடத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்கு இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். எதிர்காலத் திட்டங்களுக்காக உங்களுக்காக நேரம் ஒதுக்கி அதற்கான வேலை செய்யுங்கள்.
சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். நீங்கள் வேலை மாற்றத்திற்கான முயற்சிகளில் இருந்தால் அது சாதகமாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு உங்கள் எல்லா வேலைகளும் எளிதாக முடியக்கூடிய வாய்ப்புள்ளது. இன்று வியாபாரிகளுக்குச் சிறப்பான லாபம் கிடைக்கும். பணப் பரிவர்த்தனை செய்யும் போது ஒருவரை சாட்சியாக வைத்துக் கொள்ளவும்.
வேலை தேடும் முயற்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். விரும்பியவரை வாழ்க்கைத் துணையாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியினர் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். வியாபாரிகளின் சமுக வட்டம் அதிகரிக்கும்.
பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
துலாம்
துலாம் ராசியினர் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முதலீட்டில் ஈடுபடுவீர்கள். வீட்டில், பணியிடத்திலும் புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும்.
உங்கள் வேலைகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். சிலரை நம்பி ஏமார்ந்து மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் யாரும் எதிர்பாராத அபார வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மற்ற நாட்களை விட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பான செய்திகள் கிடைக்கும். உங்கள் மனைவியுடன் நெருக்கமும், அவர் பார்வையில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு இன்று நீங்கள் உங்கள் வேலையை நேர்மையாகச் செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் நடத்தையில் அதிக நேர்மை இருக்கும்.
பண விஷயத்தில், பேராசையைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதை தவிர்க்கவும். ஆபத்தான மற்றும் பிணைய செயல்களைத் தவிர்க்கவும்.
மகரம்
மகர ராசிக்கு இன்று சில சூழ்நிலைகள் உங்களுக்கு பாதகமாக அமையும். உங்களின் நிதி மற்றும் குடும்ப நிலைமையை மேம்படுத்தக் கூடுதல் முயற்சிகள் தேவைப்படும். பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களில் கூடுதல் கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசிக்கு இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் தினசரி வேலைகளை சரியான திட்டமிடல் தேவை. சில மாற்றங்கள் வெற்றியைத் தருவதாக இருக்கும்.
பெரிய மனிதர்களின் ஆதரவால் புதிய விஷயங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்கு இன்று உங்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவு கிடைக்கும் நாளாக இருக்கும். வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். வருமானத்தை அதிகரிக்க சில நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.