இன்றைய ராசிபலன்! நவராத்திரி நன்னாளில் அமோகப் பலன்களை பெறப்போகும் அதிஷ்ட ராசிக்காரர்கள் யார்?
ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளே!
கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அதன்படி 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
மேஷம்
பேச்சில் நிதானமும், விவேகமும் நிறைந்திருக்கும். வீட்டு பராமரிப்பில் கவனம் தேவை. கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷபம்
மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். நண்பர்கள் சிலர் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவர். பிரியமானவர்களின் அன்பும், பாசமும் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
மிதுனம்
குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
கடகம்
குடும்ப செல்வாக்கு உயரும். மனம் தெளிவு பெரும். சொந்த பந்தங்கள் கை கொடுத்து உதவுவர். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிம்மம் குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் குறையும். எதிர்பாலினத்தாருடன் கவனமாக பழகவும். கணவன், மனைவிடையே இருந்த பகைமை மாறும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கன்னி
மனதில் இருந்த கவலை நீங்கி உற்சாகம் பிறக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்க வேண்டிவரும். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
துலாம்
தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வீண் கோபத்தால் சில நல்லவர்கள் நட்பை இழக்க நேரிடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்
புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் வீண் செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்
தனுசு
குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகரம்
இக்கட்டான நேரங்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களால் சில நன்மைகள் உண்டு. தவிர்க்க முடியாத செலவுகள் வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கும்பம்
புது காரியங்களில் திட்டமிடல் அவசியம். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். உறவினர்கள் சிலர் உதவி கரம் நீட்டுவர். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.
மீனம்
பிரியமானவர்கள் நேசத்தைப் பெற முடியும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |