Today Rasi Palan: எதிர்பாராத செலவுகள் வரும் ஜாக்கிரதை - 12 ராசிகளுக்கான பலன்
ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.
அப்படியாயின் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1.மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
2.ரிஷப ராசி நேயர்களே, பிரியமானவர்களுடன் நல்லுறவு ஏற்படும். மனம் தெளிவு பெரும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
3.மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்றமான சூழ்நிலை உருவாகும். வரும் தடைகளை தகர்த்தெறிய முடியும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
4.கடக ராசி அன்பர்களே, அன்றாட தேவைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரைகள் கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
5.சிம்ம ராசி அன்பர்களே, குலதெய்வ வழிபாடு நல்ல விதமாக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் எப்போதும் பக்கபலமாக இருப்பர். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
6.கன்னி ராசி நேயர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். நேர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்றவும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
7.துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆரவாரம் நிறைந்து காணப்படும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துப் செல்லவும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
8.விருச்சிக ராசி நேயர்களே, உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். பல வேலைகளையும் ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
9.தனுசு ராசி நேயர்களே, மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கவும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.
10.மகர ராசி அன்பர்களே, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இனம் தெரியாத ஒரு சில கவலைகள் வந்து போகும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
11.கும்ப ராசி நேயர்களே, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் வாய்ப்புகள் தேடி வரும்.
12.மீன ராசி நேயர்களே, பிடிவாத போக்கை கைவிடவும். பெற்றோர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
