திடீர் யோகம் கிட்டும் நாள்: இன்றைய ராசிபலன் (11.02.2024)
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் பற்றி பார்க்கலாம்.
மேஷம்
பழைய கடன் பிரச்சனை தீர்ந்து நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள் இன்று, வியாபாரம் பெருகும், பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும், சிறப்பான நாள்.
ரிஷபம்
உங்களால் உதவி கிடைக்கப்பெற்றவர்கள் உதவி செய்வார்கள், பிள்ளைகள் விடயத்தில் நம்பிக்கை உண்டகும், உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள், சாதித்து காட்டும் நாள்.
மிதுனம்
உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, புத்துணர்ச்சி பெருகும் நாள்.
கடகம்
எந்த காரியமாக இருந்தாலும் யோசித்து நிதானமுடம் செயல்படவும், வியாபாரத்தில் கவனம் தேவை. நிதானம் தேவைப்படும் நாள்.
சிம்மம்
கடினமான காரியங்களை எளிதாக நிறைவேற்றும் நாள் இன்று, பயணங்களால் மகிழ்ச்சி கூடும், சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு, திறமைகள் வெளிப்படும் நாள்.
கன்னி
நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும், வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும், பழைய சிக்கல்கள் தீர்ந்து அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள், திடீர் யோகம் உண்டாகும் நாள்.
துலாம்
நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும், சக ஊழியர்களின் உதவியுடன் வேலையில் முன்னேற்றம் உண்டு, புதுமை படைக்கும் நாள்.
விருச்சிகம்
எதிர்பாராத வேலை இன்று நிறைவேறும், கடன் சுமை தீர்ந்து வியாபாரம் பெருகும், தாயாருடன் மோதல் வரலாம், நன்மை கிட்டும் நாள்.
தனுசு
அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு உண்டாகும், உடன்பிறந்தவர்களுடன் இணக்கம் காட்டுவீர்கள், உத்தியோகத்தில் ஆதரவு உண்டு, தைரியம் கூடும் நாள்.
மகரம்
நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு உண்டு, கணவன்- மனைவிக்கு இருந்த மனக்கசப்பு நீங்கும், மகிழ்ச்சியான நாள்.
கும்பம்
சிறு சிறு அவமானம் உண்டாகலாம், மனக்கசப்பு ஏற்படும், வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
மீனம்
ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது, வியாபராத்தில் போராட்டம் இருக்கும், மறைமுக தொந்தரவுகள் இருக்கலாம், தடைகளை தாண்டு முன்னேறும் நாள்.