உலக இதய தினம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா? விழித்து கொள்!
இன்றைய தினம் “உலக இதய தினம்” கொண்டாடப்படுகின்றது.
இந்த தினம் ஏன் கொண்டாடுகிறார் என பலரின் மனதிலும் ஒரு கேள்வி இருக்கும்.
அதாவது இதய நோயாளர்களை நினைவுப்படுத்தும் விதமாக இந்த இன்றைய நாளில் கொண்டாடப்படுகின்றது.
அத்துடன் இதய நோய் சார்ந்த ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த தினம் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதய தினத்தின் நோக்கம்
இதய நோயின் அறிகுறி, நோயை தடுப்பது, முதலுதவி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை ஆகியவற்றை பற்றி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
மேலும் மனிதனின் உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் இதுவும் ஒன்று.
இதில் ஏற்படும் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 கோடி பேர் இதய நோயால் இறக்கின்றனர்.
இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31 சதவீதமாகும். மேலும் "இதயத்தைப் பயன்படுத்து, இதயத்தை அறி" என்பதே இந்த ஆண்டு இதய தினத்தின் நோக்காக பார்க்கப்படுகின்றது.
இதய நோய்களை தடுக்கும் வழிமுறைகள்
1. பெரும்பாலான இதயநோய்கள் அழுக்கான காற்றை சுவாசிப்பதன் மூலம் தான் ஏற்படுகின்றது. இதனை குறைக்க வேண்டும் என்றால் நாம் ஆரோக்கியமான சூழலில் வாழ வேண்டும்.
2. இயற்கையை நேசித்து மரம், செடிகளுடன் இருக்க வேண்டும்.
Image - theladders
3. புகைத்தல் அல்லது புகைப்பிடிப்பவரிடம் நெருக்கமாக இருத்தல் இவற்றை குறைக்க வேண்டும். இது புற்றுநோய்களையும் சுவாச கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
4. மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை இதயத்தில் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கின்றது. இதிலிருந்து விடுபெற வேண்டும் என்றால் முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி தினமும் அவசியம்.
5. உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பவர்கள் முறையான உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அடிக்கடி சிறிது தூரம் நடக்கவேண்டும்.
6. சவர்மா, பீட்சா, பர்கர், துரித முறையில் சமைக்கும் கோழி இறைச்சி, மைதா மாவால் செய்யப்படும் உணவுகளும் ஜீரணத்தை பாதித்து, நுரையீரலையும், இதயத்தையும் சேதமாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |