இன்றைய ராசிபலன்: எதிர்பாராத செல்வங்களை பெறும் நட்சத்திர ராசிகள்
மேஷம்:
அசுவினி: பல நாட்களாக இருந்து வந்த பிரச்னை ஒன்று தீரும். பரணி: வியாபார விஷயங்களில் எதிரிகளை சமாளிப்பீர்கள். கார்த்திகை 1: முயற்சிகளை அதிகப்படுத்தி வெற்றி காண்பீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: மேலதிகாரியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். ரோகிணி: பணியில் அலட்சியம் வேண்டாம். பேச்சினால் நன்மை வரும். மிருகசீரிடம் 1,2: இனிய பேச்சு வார்த்தையால் பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: தள்ளிப்போட்ட நல்ல விஷயத்தை இன்று செய்து முடிப்பீர்கள். திருவாதிரை: குடும்பத்தினர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புனர்பூசம் 1,2,3: மற்றவர்களிடம் பேசும்போது மிகக் கவனம் தேவை.
கடகம்:
புனர்பூசம் 4: நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பூசம்: நிம்மதியான நாள். யாருக்கும் ஆலோசனை வழங்காதீர்கள். ஆயில்யம்: நல்ல செய்தி எதிர்நோக்கியவர்களுக்கு அது தாமதமாக வரும்.
சிம்மம்:
மகம்: சுப விஷயங்களுக்கான பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். பூரம்: நீண்ட நாளாக நீங்கள் விருப்பப்பட்ட விஷயம் தானே நடக்கும். உத்திரம் 1: எந்தவொரு புது முடிவு எடுத்தாலும் அது நன்மையே தரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: இன்று வம்பில் மாட்ட வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். அஸ்தம்: பொறுப்பான வேலையில் உள்ளோர் கவனமாகச் செயல்படுங்கள். சித்திரை 1,2: புதிய தீர்மானம் பற்றி நல்ல முடிவுக்கு வருவீர்கள்.
துலாம்:
சித்திரை 3,4: பல நாட்களாக ஆர்வமாகச் செய்த முயற்சி பலனளிக்கும். சுவாதி: புதிய பொறுப்பு ஏற்று செய்ய வேண்டிய கட்டாயம் உங்களுக்கு வரும். விசாகம் 1,2,3: உங்களின் கவுரவம் உயரும்படியான செயல்களைச் செய்வீர்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: தாமதப்பட்ட விஷயம் ஒன்றை முனைப்புடன் செய்து முடிப்பீர்கள். அனுஷம்: உழைப்பினால் முயற்சி கைகூடும். தாயாருடன் நல்லுறவு உண்டு. கேட்டை: குடும்பத்தில் ஒருவருக்கு கவலையளித்து வந்த பிரச்னை தீரும்.
தனுசு:
மூலம்: குடும்ப விஷயம் பற்றிய நல்ல செய்திகள் வந்து சேரும். பூராடம்: பயம் நீங்கி இன்றைய நாள் குதுாகலமான நாளாக அமையும். உத்திராடம் 1: யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டுப் பேச வேண்டாம்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: குடும்ப ஒற்றுமை மேம்படும். உற்சாகமான நாள். திருவோணம்: வியாபார போட்டிகளை முறியடிப்பீர்கள். கவலை தீரும். அவிட்டம் 1,2: முன்பு இருந்ததை விட அதிகமாக உழைக்க வேண்டி வரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: சமீபத்திய நிகழ்ச்சிகள் அளித்த மனக்கலக்கம் இன்று தீரும். சதயம்: சில விஷயங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். பூரட்டாதி 1,2,3: நீண்ட நாளாக இருந்து வந்த பயம் தீரும். நட்பு வட்டம் விரியும்.
மீனம்:
பூரட்டாதி 4: பணியாளர்களுக்கு பொறுப்பு கூடும். இருந்தாலும் உற்சாகம் குறையாது.
உத்திரட்டாதி: வாகனத்தை சீர் செய்வீர்கள். புதிய பொறுப்பை ஏற்பீர்கள்
ரேவதி: உழைப்பினால் நன்மை வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.