இன்று திடீர் அதிர்ஷ்டத்தால் நன்மை எந்த ராசிக்கு? முழு ராசிபலன் இதோ
மேஷம்:
அசுவினி: முன்வினைப் பாவம் தீர நற்செயல்கள் செய்வீர்கள். பரணி: குழந்தைகளின் முயற்சி பலிக்கும். உடல்நிலை மேம்படும். கார்த்திகை 1: மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. சமூக மதிப்பு கூடும் ரோகிணி: யோசனையுடன் செயல்பட்டு வெற்றியை நோக்கிச் செல்வீர்கள். மிருகசீரிடம்1,2: கண்ணியமாக செயல்பட்டு நல்லவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: மனதில் இருந்த கவலை தீரும். நண்பர்களால் உதவி உண்டு. திருவாதிரை: அலைச்சல், வீண் செலவுகள் இருக்கும். குடும்பத்தில் டென்ஷன் வரும். புனர்பூசம் 1,2,3: வீண் பயம் நீங்கும். போராடி வாழ்வில் நன்மை காண்பீர்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: வலிய வரும் பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு காண்பீர்கள். பூசம்: மனதில் மகிழ்ச்சி நிலவும். விட்டு கொடுத்து நற்பெயர் பெறுவீர்கள். ஆயில்யம்: நற்செயல்கள் காரணமாக மதிப்பும், மரியாதையும் கூடும்.
சிம்மம்:
மகம்: சக பணியாளருக்கு உதவுவீர்கள். வயதானோருக்கு நன்மை கிடைக்கும். பூரம்: இளைஞர்கள் நன்மையடைவர். நீண்டநாள் முயற்சி ஒன்று வெல்லும். உத்திரம்,1: முன்னேறிச் செல்வதற்கான முயற்சிகளில் மனம் தீவிரமாக ஈடுபடும்.
கன்னி:
உத்திரம்2,3,4: சாதுர்ய பேச்சால் மற்றவர்களைக் குழப்பாமல் இருப்பது நல்லது. அஸ்தம்: தீய செயல் செய்யும் நண்பர்களிடம் இருந்து முழுமையாக விலகுவீர்கள். சித்திரை 1,2: பேச்சிலும் செயலிலும் முழுமையான நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
துலாம்:
சித்திரை, 3,4: ஆணவப் போக்கால் தொல்லைக்கு ஆளாகலாம் கவனம். சுவாதி: வெற்றி வாய்ப்பை பெற புதுவித முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விசாகம் 1,2,3: உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விசாகம்4: வயதிலும் அனுபவத்திலும் சிறந்தவர்களால் பாராட்டப்படுவீர்கள். அனுஷம்: மற்றவர்களைக் கேலியாகப் பேசிக் கோபத்துக்கு ஆளாகாதீர்கள். கேட்டை: அவசர முடிவுகளைத் தவிர்ப்பீர்கள். நெருங்கிய உறவினர் உதவுவர்.
தனுசு:
மூலம்: நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வழக்கத்தை விட வருமானம் கூடும். பூராடம்: உங்கள் செயல்பாட்டுக்கான நற்பெயரும் பாராட்டும் கிடைக்கும். உத்திராடம்1: நினைத்ததை நடத்தி முடிக்க அனுபவம் கைகொடுக்கும்.
மகரம்:
உத்திராடம்,2,3,4: எத்தனைபேர் உங்கள் மேல் அன்பு வைத்திருக்கிறார்கள் என்று புரியும். திருவோணம்: விலை உயர்ந்த பொருட்களை வாங்க முயற்சி செய்வீர்கள். அவிட்டம்,1,2: அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துப் போவது நலம்
கும்பம்:
அவிட்டம், 3,4: விடாமுயற்சியால் வெற்றி இலக்கை நோக்கிச் செல்வீர்கள். சதயம்: நாவடக்கம் காரணமாக சிரமத்தில் சிக்காமல் நிம்மதியடைவீர்கள். பூரட்டாதி,1,2,3: மதிப்பிற்குரிய பெரியமனிதரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
மீனம்:
பூரட்டாதி 4: நல்லவர்களின் வழிகாட்டுதலை ஏற்றால் சிரமம் குறையும்.
உத்திரட்டாதி: நியாயமான கருத்துக் உரக்கச் சொல்வீர்கள். சேமிக்கலாம் கவனம்.
ரேவதி: குடும்பத்தில் ஒருவர் உயர்நிலை எட்டுவதால் மகிழ்ச்சியடைவீர்கள்.