இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி யார்னு தெரியுமா? ராஜ யோகம் இவர்களுக்கே!
மேஷம்
நிதானமாக, திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் எடுத்த முடிவில் உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். வேலை சூழல் கடினமானதாக இருக்கும். வேலையில் தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.
ரிஷபம்
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். திருப்தி அளிக்கும் வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை, தொழில் சூழல் வாய்ப்புகள் நிறைந்ததாக காணப்படும். உற்சாகத்துடனும் புத்துணர்வுடனும் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் சாதகமான சூழலை அமைக்க கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைவு நிலவும். கணவன் மனைவி இடையே இனிய சூழல் நிலவ நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நிதி நிலை சாதகமா இருக்காது. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் ஓரளவுக்கு நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். மனதில் உள்ள எரிச்சல், பயம், பதற்றத்தை வாழ்க்கைத் துணைவரிடம் வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. பணப் புழக்கம் சிறிதளவு சாதகமாக இருக்கும். செலவும் அதிகரிக்கும்.
சிம்மம்
பாதுப்பின்மை உணர்வு அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த கவலை ஏற்படும். வேலைப் பளு அதிகரிக்கும். நிதனமாகச் செயல்படுவது தவறுகளைத் தவிர்க்க உதவும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். குடும்பத்தில் அமைதி நில நிதானமாக இருப்பதுடன் விட்டுக்கொடுப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இல்லை. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
கன்னி
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பாராட்டு, வெகுமதியைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். குடும்பத் தேவையை நிறைவேற்றச் செலவு செய்வீர்கள்.
துலாம்
சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடுவீர்கள். வேலை, தொழிலில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுமுக உறவு நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு வலுப்படும். நிதி நிலை முன்னேற்றமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கு ஆகியவற்றில் மனதை செலுத்துவது அமைதியைத் தரும். வேலை சூழல் சாதகமாக இல்லை. வெற்றி பெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.
தனுசு
சோர்வான நாளாக இருக்கும். மனதில் குழப்பம், தன்னம்பிக்கையின்மை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது இன்றைய நாளை சாதகமாக மாற்ற உதவும். வேலைப் பளு அதிகரிக்கும். அன்றாட வேலையைக் கூட முடிக்க முடியாத சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மனக்குழப்பம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
மகரம்
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். அனைத்து வேலையையும் விரைந்து முடிப்பீர்கள். இதனால் உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.
கும்பம்
அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இலக்குகளை எளிதாக அடைவீர்கள். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.
மீனம்
முன்னேற்றமான நாளாக இருக்கும். அபாரமான வளர்ச்சியைக் காண்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.