சரிவை நோக்கி சென்ற தங்கம் கொடுத்த ஷாக்! இன்று கடகடவென எகிறிய தங்கம் விலை
தங்கம் விலை இன்று 2வது நாளாக அதிகரி்த்துள்ளது. ஒரேநாளில் சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரித்துள்ளது
இன்றைய தங்கம் விலை
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,625 ஆகவும், சவரன், ரூ.37,000 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமையான இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 55ரூபாய் அதிகரித்து, ரூ.4,680ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 ஏற்றம் கண்டு, ரூ.37,440ஆக அதிகரித்துள்ளது.
தங்கம் விலை கடந்த வாரத்தில் சரிவை நோக்கியே பெரும்பாலான நாட்கள் நகர்ந்தது. இந்த வாரத்தில் தொடக்கத்திலிருந்து தங்கம் விலை சரிந்தநிலையில் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்தது.
ஆனால், நேற்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்தது. இன்று யாரும் கணிக்க முடியாத வகையில் கிராமுக்கு 55 ரூபாயும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நாளுக்குநாள் கணிக்க முடியாத நிலையில் செல்கிறது. தங்கம் விலை இருநாட்கள் சரிந்தநிலையில் மேலும்விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு, நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்துவரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா, அதிகரிக்குமா என்ற குழப்பத்துடனும், தயக்கத்துடனும் நகை வாங்குகிறார்கள்.
வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 1.50 காசு உயர்ந்து, ரூ.61.50ஆகவும், கிலோவுக்கு ரூ.1500 சரிந்து, ரூ.61,500 ஆகவும் விற்கப்படுகிறது.