மளமளவென சரிந்த தங்கத்தில் இன்றைய மாற்றம்(02.09.2023) - சவரன் எவ்வளவு தெரியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது சற்று வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை சில தினங்களில் அதிகரித்தும் பெரும்பாலான நாட்களில் குறைந்தும் வந்தது. ஆனால் இன்று சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,535ஆகவும், சவரன், ரூ.44,280 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, 5,555 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 160 அதிகரித்து, 44 ஆயிரத்து 440 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த வாரங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போதும் அது விலைக்கு நெருங்கியுள்ளது பாமர மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. தற்போது தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பெடரல் வங்கியின் வட்டி உயர்வே என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதே போன்று வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 ஆகவும், கிலோவிற்கு ரூ.80,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தாலும் 5 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
You May Like This Video