இன்றைய தங்கம் விலை! 3 நாட்களுக்கு பின்பு உயர்வு: கலக்கத்தில் மக்கள்
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று உயர்வடைந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வந்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, 4,705 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.240 சரிந்து, ரூ.37,640ஆகவும் விற்று வந்த நிலையில், இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆம் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 4,715 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ 80 அதிகரித்து ரூ.37,720ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து 3 தினங்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளில் உயர்வில் காணப்படுகின்றது.
இந்த வாரம் முழுவதும் தங்கம்விலை தொடர்ந்து உயருமா? என்ற அச்சத்தில் நகை பிரியர்கள் காணப்படுகின்றனர்.
ஆனால் இன்று வெள்ளி விலை எந்தவொரு மாற்றம் இல்லாமல் கிராமுக்கு ரூ.63.00 ஆகவும், கிலோ ரூ.63,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.