தொடர்ந்து 3வது நாளாக கிடுகிடுவென சரிந்த தங்கம் விலை! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்றும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
தங்கத்தின் இன்றைய விலை
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, 4,735 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.80 சரிந்து, ரூ.37,880ஆகவும் விற்று வந்த நிலையில், இன்றும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஆம் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 4,705 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ 240 குறைந்து ரூ.37,640ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து 3 தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகின்றது..
ஆனால் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ஒரு 70 பைசா சரிந்து ரூ.63.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.63,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.