தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவில் தங்கம் விலை! தொடர்ந்து மாற்றம் ஏற்படுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்றும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
தங்கத்தின் விலை
சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, 4,745 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.160 சரிந்து, ரூ.37,960ஆகவும் விற்று வந்த நிலையில், இன்றும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஆம் நேற்று கிராம் ரூ.4745 ஆக இருந்த தங்கம்விலை இன்று 10 ரூபாய் குறைந்து ரூ.4735க்கு விற்கப்படுகின்றது. அதே போன்று ஒரு சரவன் விலை நேற்று ரூ.37,960 ஆக இருந்த நிலையில், இன்று 80 ரூபாய் குறைந்து ரூ.37,880 ஆக விற்கப்பட்டு வருகின்றது.
வரும் வாரங்களில் தங்கம் விலை உயரவும் வாய்ப்புள்ளதாகவும், தற்போது இருக்கும் விலையில் வாங்குவது சிறப்பாக இருப்பதாக நிபுணர்களும், வியாபாரிகளும் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அந்நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு வட்டிவிகிதத்தினை உயர்த்தப்படுவதாக இருந்த நிலையில், தற்போது அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு சல்லாது என்றும், பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டிவிகிதமும் பெரிதாக உயர்த்தப்பட மாட்டாது என்று கூறப்படுவதால் இன்று பங்குச்சதையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ஒரு 20 பைசா அதிகரித்து, ரூ.63.70 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.63,700 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.