3வது நாளாக கடும் வீழ்ச்சியில் தங்கம் விலை: மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்
தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் சவரணுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,685 ஆகவும், சவரன், ரூ.37,480 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 20 ரூபாய் சரிந்து, ரூ.4,665ஆக குறைந்தது. சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,320ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
தங்கம் விலை இந்த வாரம் ஏற்றத்துடன் தொடங்கினாலும் அது நீடிக்கவில்லை. புதன்கிழமையிலிருந்து தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
இந்த விலை குறைவு அடுத்தடுத்த நாட்களும் நீடிக்குமா என்று நகைப்பிரியர்கள் ஆர்வத்தில் உள்ளனர். பண்டிகைக் காலம் நெருங்குவதால் விலை குறைந்துவருவதால் நகை வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது
அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படும் நிலையில் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ரூ.61.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.61,500 ஆகவும் விற்கப்படுகிறது