இன்றைய தங்கம் விலை! இறங்கிய வேகத்தில் அதிரடியான ஏற்றம்: அதிருப்தியில் மக்கள்
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் அதிகரித்துள்ள நிலையில், கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் ஏற்றம் கண்டுள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,700 ஆகவும், சவரன், ரூ.37,600 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் செவ்வாய்கிழமையான இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 5 ரூபாய் அதிகரித்து, ரூ.4,705ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.40 ஏற்றம் கண்டு, ரூ.37,640ஆக அதிகரித்துள்ளது.
தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதிலிருந்து ஏற்றத்துடனே காணப்படுகிறது. கடந்த வாரத்தின் பெரும்பகுதி நாட்கள் தங்கம் விலை ஊசலாட்டத்துடன், விலை குறைந்தநிலையில் இந்த வாரம் அதிகரித்து வருகிறது.
பண்டிகைக் காலம் நெருங்குவதால் மக்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆசை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டம் இந்த வாரத்தில் நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. அமெரி்க்காவில் வட்டிவீதம் உயர்த்தப்படும்போது, டாலர் மதிப்பு வலுப்பெற்று உலக நாடுகளின் கரன்ஸிகளின் மதிப்பு சரியத் தொடங்கும்.
இது இந்திய ரூபாய் மதிப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும், தங்கத்தின் தேவையை சர்வதேச அளவில் குறைக்கும். அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் தங்கம் விலையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 10 பைசா அதிகரித்து, ரூ.61.80 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,100 உயர்ந்து, ரூ.61,800 ஆகவும் விற்கப்படுகிறது