Today Gold Rate 12.03.2024: தாறுமாறாக எகிறிய தங்கம் விலை சற்று குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக தாறுமாறாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்துவருகின்றது. இன்று சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,150 ஆகவும், சவரன், ரூ.49,200 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, 6,149 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 8 குறைந்து, ரூபாய் 48 ஆயிரத்து 192 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.79.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.79,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தாலும் 8 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |