கவலை அளித்த தங்கம் விலை! காரணம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிரடியாக குறைந்துள்ள நிலையில், இன்று உயர்ந்துள்ளதால் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,345ஆகவும், சவரன், ரூ.42,760 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, 5,350 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 40 அதிகரித்து, ரூபாய் 43 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை நேற்று கடகடவென சரிந்துள்ள நிலையில், இன்று விலை அதிகரித்து மீண்டும் 43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பாமர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.74.20 ஆகவும், கிலோவிற்கு ரூ.400 குறைந்து ரூ.74,200 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.