மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் என்ன?
இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தைகள் சரிவு
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

தனுஷுக்கு எதிராக லதா ரஜினிகாந் செய்த காரியம்! பேரன்கள் கற்பித்த சரியான பாடம்
இன்றைய தங்கத்தின் விலை
எனினும் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ரூ.4831-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.38648-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41840-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை 40 பைசா உயர்ந்து ரூ.72.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.72,800 ஆக உள்ளது.
