இரண்டு நாளில் மலைபோல் கடகடவென சரிந்த தங்கம்! சவரணுக்கு எவ்வளவு தெரியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களில் ரூ.1,350 சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் கடுமையாக சரிந்துள்ளது. இன்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,415 ஆகவும், சவரன், ரூ. 43,320 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80குறைந்து, 5,335 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 640 குறைந்து, ரூபாய் 42 ஆயிரத்து 680 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 44 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை, தொடர்ந்து இரண்டு தினங்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
தற்போது தங்கத்தின் விலை குறைவதற்கு காரணம் பங்கு சந்தையில் வீழ்ச்சி, பெடரல் வங்கியின் வட்டி உயர்வு, போன்ற சர்வதேச காரணிகளால் குறைவை நோக்கி செல்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதே போன்று வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1.80 பைசா குறைந்து ரூ.74.20 ஆகவும், கிலோவிற்கு ரூ.1.800 குறைந்து ரூ.74,200 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.