குறட்டை விடுவதை அலட்சியமாக விடாதீங்க... மிகப்பெரிய நோய்க்கு அறிகுறியாக இருக்கும்
குறட்டை விடுவதற்கும், சர்க்கரை நோய்க்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குறட்டை
இன்று பெரும்பாலான நபர்கள் இரவு தூங்கும் போது வரும் குறட்டை பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. குறட்டை மற்றவர்களின் தூக்கத்தில் இடையூறாக அமைகின்றது.
குறட்டை என்பது தூங்கும் போது ஏற்படும் ஒருவகையான சத்தமாகும். வாய் மற்றும் மூக்கு வழியாக சுவாசிக்கும் போது காற்று தொண்டை திசுக்களை அதிர்வடையச் செய்வதால் குறட்டை ஏற்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணமாக வாய்வழி மூச்சுவிடுதல், அதிகமான எடை, ஒவ்வாமை மற்றும் தூக்கக்கோளாறு, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகியவை கூறப்படுகின்றது.
ஆனால் சில தருணங்களில் இதய நோய் தீவிர பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் குறட்டைக்கும் நீரிழிவு நோயாளிக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோய்க்கு சம்பந்தமா?
குறட்டை விடுவது சத்தம் மட்டுமின்றி, இவை தீவிரமான உடல்நல பாதிப்பின் அறிகுறியாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதுமட்டுமின்றி குறட்டை சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
சுவாச பாதையில் சதை வளர்ச்சி, தசை தளர்வு, உடல் பருமன் போன்றவற்றால் சுவாசத்தில் தடை ஏற்படுவதுடன், இவை ஆக்ஸி்ஜன் அளவை குறைக்கும் பொழுது, அச்சுரப்பிகள் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட விதிகளை உருவாக்குகின்றது.

குறட்டை விடுவது சாதாரணமான விடயமாக எண்ணாமல், ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை மேற்கொண்டால், இதயம் தொடர்பான பாதிப்பின தவிர்க்க முடியும் என்றும், ஆரோக்கியமான வாழ்விற்கு ஆழ்ந்த மற்றும் தடையில்லாத தூக்கம் அவசியமாகும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |