மலைபோல் சரிந்த தங்கம் இன்று திடீர் ஏற்றம்! காரணம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு தினங்களாக குறைந்துவந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளதால் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமையின் படி கிராம் ரூ.5,335ஆகவும், சவரன், ரூ.42,680 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, 5,365 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 240 அதிகரித்து, ரூபாய் 42 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தையும் தாண்டி வந்துள்ள நிலையில், சற்று குறைய தொடங்கியது, ஆனால் இன்று விலை அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தங்கத்தின் விலை குறைவதற்கு காரணம் பங்கு சந்தையில் வீழ்ச்சி, பெடரல் வங்கியின் வட்டி உயர்வு, போன்ற சர்வதேச காரணிகளால் குறைவை நோக்கி செல்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதே போன்று வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.74.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.74,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.