கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலை! வல்லுநர்கள் கூறும் காரணம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நடுத்தர மக்களிடையே கடும் சோகம் நிலவி வருகின்றது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை இரண்டு தினங்களாக அதிகரித்து வரும் நிலையில், இரண்டாவது நாளாக இன்று சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையில் கிராம் ரூபாய் 5,056 ஆகவும், சவரன் ரூபாய் 40 ஆயிரத்து 448 ஆக இருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.14 ரூபாய் அதிகரித்து, 5,070 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 112 அதிகரித்து, ரூபாய் 40 ஆயிரத்து 560க்கு விற்கப்படுகின்றது.
தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் சற்று குறைந்திருந்த நிலையில், இந்த வாரம் 40 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துள்ளதால் பாமர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தங்கத்தின் விலை குறைவதற்கு காரணம் பங்கு சந்தையில் வீழ்ச்சி, பெடரல் வங்கியின் வட்டி உயர்வு, போன்ற சர்வதேச காரணிகளால் குறைவை நோக்கி செல்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதே போன்று வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 பைசா அதிகரித்து ரூ.73.10 ஆகவும், கிலோவிற்கு ரூ.100 அதிகரித்து ரூ.73,100 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.