இன்றைய தங்கம் விலை! வாங்க சரியான நேரம் இதுதானா? திடீர் மாற்றத்தால் குழப்பத்தில் மக்கள்
வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. சவரன் ரூ.39ஆயிரத்தை இந்த வாரத்தில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் இன்றைய விலை
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,845க்கும், சவரன் ரூ.38,7600க்கும் விற்பனை ஆனது.
இன்று காலை தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.4,850ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.38,800க்கும் விற்பனையாகிறது.
கடந்தவாரம் தங்கம் கிராம் ரூ.4,795ல் தொடங்கியது, வார இறுதியான சனிக்கிழமையன்று, கிராம் ரூ.4,845க்கு முடிந்தது.

இந்த வாரத்தில் டாலரின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை நிலவரம் ஆகியவற்றைப் பொறுத்து தங்கத்தின் விலையி்ல் மாற்றம் இருக்கும்.
எதிர்பாராதவிதமாக இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் விலை இனிமேல் படிப்படியாக அதிகரிக்குமா அல்லது விலை குறையுமா என்று ஊகிக்க முடியாத அளவில் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.
வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.63.00 ஆகவும், கிலோ ரூ.63000க்கும் விற்கப்படுகிறது.
