இன்றைய தங்கம் விலை! தொடர்ந்து சரிவை நோக்கி செல்லும் தங்கம்: வல்லுநர்களின் குட்நியூஸ்
தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் சரிந்து வரும் நிலையில், இன்று இரண்டாவது நாளாக விலை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,815க்கும், சவரன் ரூ.38,520க்கும் விற்கப்பட்டது.
இன்று காலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் சரிந்து, ரூ.4,800 ஆகவும், சவரனுக்கு ரூ.120 சரிந்து, ரூ.38,400ஆகவும் விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த 15ம் தேதி முதல் சவரனுக்கு ரூ.912 குறைந்துள்ளது.
சர்வதேச சூழல், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, வரும 25 முதல் 27ம் தேதி அமெரி்க்க பெடரல் வங்கியின் கூட்டம் ஆகியவற்றில் எடுக்கும் முடிவு தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வல்லுநர்களின் கருத்து என்ன?
ஏற்கெனவே அமெரிக்க பெடரல் வங்கியின் சார்பில் நடக்க இருக்கும் கூட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர்.
சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள், பெடரல் வங்கியின் முடிவு ஆகியவற்றால் இந்த வாரத்திலும் தங்கத்தின் விலையில் பெரிய சரிவு இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 40 பைசா குறைந்து, ரூ.60.70 ஆகவும், கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.60,700க்கும் விற்கப்படுகிறது