Today Gold Price: இன்று தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! ஏன்னு தெரியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக ஏற்றம் இறக்கத்தை கண்டுவரும் நிலையில், இன்று எந்தவொரு மாற்றம் ஏற்படாமல் நேற்றைய விலைக்கே விற்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு எந்தவொரு மாற்றம் இல்லாம் அதே விலையில் விற்கப்படுகின்றது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,740ஆகவும், சவரன், ரூ.53,920 ஆகவும் இருந்து வந்தது.
இன்றும் கிராமுக்கு 6,740 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 53 ஆயிரத்து 920 ஆகவும் விற்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையும் எந்தவொரு மாற்றம் இல்லாமல் விற்பனை ஆகின்றது. கிராமுக்கு ரூ.97.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.87,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |