அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை: ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்தது
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மட்டும் 528 ரூபாய் உயர்ந்து, 36960ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கொரோனா பெருந்தொற்றால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, பாதுகாப்பான முதலீடு என தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தொடங்கினர்.
இதனால் தங்கம் விலை ஏற்றம் கண்டது, இந்நிலையில் கடந்த வாரம் சற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் 528 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை ஒரு ரூ.4620 விற்பனை செய்யப்படுகிறது, நேற்று ரூ.4545க்கு விற்பனையானது.
ஒரு பவுனின் விலை ரூ.36360க்கு விற்பனையாகிறது, இதுநேற்றைய விலையை விட 528 ரூபாய் அதிகமாகும்.
24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.50400க்கு விற்பனையாவதால் மக்கள் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.