தங்கம் விலையில் அதிரடி மாற்றம் .... இன்றைய விலை நிலவரம் இதோ!
இன்றைய (அக்டோபர் 19) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையில் அதிரடியான சரிவு ஏற்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது.

குறிப்பாக, கடந்த வாரத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாகத் தங்கத்தின் விலை சரிவடைந்து வந்ததால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மத்தியில் விலை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகச் சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரம்
22 காரட் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது.

இதன்படி, ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.13,570-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,08,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலை அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.
ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.11,155-க்கும், ஒரு சவரன் ரூ.89,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.