தங்கம் விலை அதிகரிப்பு - சோகத்தில் இல்லதரசிகள் - இன்றைய விலை விபரம்!
அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில், கடந்த வாரத்தில் தங்கல் விலை அதிகரித்துக்கொண்டே இருந்துள்ளது.
அந்த வகையில், சென்னையில் இன்றைய நாளில் பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38,648-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,817-க்கு விற்கப்பட்டது.
இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,831-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.66.10-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.66,100-க்கு விற்பனையாகிறது.