2021 இல் ஆறுகிரக சேர்க்கையால் அற்புத பலன்களை அடையும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

today day astrology
By Jon Jan 18, 2021 01:43 PM GMT
Report

தை மாதத்தில் சூரியன் மகரம் ராசியில் பயணம் செய்கிறார். மகரம் ராசி சனிபகவானின் வீடு. சனிபகவான் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். கூடவே குரு நீச பங்கம் பெற்று சஞ்சரிக்க புதனும் இணைந்துள்ளார். இந்த கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம் செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, ராசியில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் பத்தாம் வீட்டில் சூரியன், சனி, குரு, புதன் இணைந்திருக்கின்றன. புதன் 11ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியானாலும் வக்ரமடைகிறார். இந்த மாத பிற்பகுதியில் சுக்கிரன் பத்தாம் வீட்டிற்கு வருகிறார். மாத இறுதியில் தை அமாவாசை நாளில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைகின்றன.

பத்தாம் வீட்டில் சூரியன் சனி இணைந்திருப்பதால் அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். உங்களுக்கு இந்த மாதம் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசு ரீதியான தொடர்புகளால் நன்மைகள் நடைபெறும். வேலை, தொழில் வியாபாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொடர்பு கிடைக்கும். நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தினரிடன் ஆலோசனைகளை கேளுங்கள். சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வரும் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். 

 மகரம் ராசி கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு. செய் தொழில் லாபம் வரும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். மாத இறுதியில் சனிபகவான் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால் நன்மை அதிகரிக்கும். புதிய வேலைக்கு சேரலாம். வியாபாரிகளுக்கு லாபம் நிறைந்த மாதமாகும்.

சொந்த நிலம் வீடு வாங்க இது நல்ல மாதம். காலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு தொட்டது துலங்கும் வெற்றி நிச்சயம் நடைபெறும். உங்கள் வாழ்வில் சுபமான மாற்றம் நடைபெறும். பிரிந்தவர்கள் இணைவார்கள். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். திருமண சுபகாரியம் கைகூடும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடையை விரிவு படுத்துவீர்கள்.

தை பூசம் நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுங்கள். தை அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும். துவரம் பருப்பு தானம் கொடுங்கள். ரிஷபம் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, ராசியில் ராகு, ஏழாம் வீட்டில் கேது, 12ஆம் வீட்டில் செவ்வாய், எட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் சூரியன்,குரு, புதன், சனி ஆகிய கிரகங்கள் இணைந்துள்ளன.

இந்த மாதம் சுப செலவுகள் அதிகம் நடைபெறும். இந்த மாதம் ராசியில் ராகு இருப்பதால் மனதில் இனம் புரியாத ஒரு பயம் இருக்கும். அந்த பயத்தை போக்குங்கள் தோல்விகளை வெற்றியாக மாற்றக்கூடிய காலம் வந்து விட்டது. சுக்கிரன் எட்டில் இருப்பதால் பணம் விவகாரங்களில் கவனமாக இருங்கள்.

வேலையில் கவனம் தேவை. யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். ராசிக்கு எட்டில் உள்ள சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவது நம்பிக்கையை அதிகரிக்கும். இதுநாள் வரை இருந்த தடை தாமதங்கள் நீங்கும். பிரிந்திருந்த குடும்பத்தினம் ஒன்றாக சேரும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கும். சுப செய்திகள் தேடி வரும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வரும். புதிய வாகனம் வாங்கும் யோகம்.

வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சுக்கிரன் இடப்பெயர்ச்சிக்குப் பிறகு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வேலையில் மதிப்பு மரியாதை கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குரு பார்வை சுக்கிரன் இடமாற்றத்தினால் திருமண யோகம் கைகூடி வருகிறது. வேலை தேடுபவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

தொட்டது துலங்கும் நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதம். வியாபாரத்தில் யோகமான மாதம் லாபம் அதிகம் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வெற்றிகள் கிடைக்கும். பிப்ரவரி மாதத்தில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைகின்றன. வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

அந்த நாட்களில் குல தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். வெள்ளிக்கிழமை வீட்டில் பூஜை அறையில் டயமண்ட் கல்கண்டு வைத்து வழிபடவும். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை துளசி மாலை அணிவித்து தரிசனம் செய்ய நன்மைகள் நடைபெறும். மிதுனம் ஆறாம் வீட்டில் கேது ஏழாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், 12ஆம் வீட்டில் ராகு சஞ்சாரம் உள்ளது. ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சூரியன், சனி, குரு, புதன் சஞ்சாரம் உள்ளது. புதன் 25ஆம் தேதி கும்பம் ராசிக்கு சென்று மீண்டும் வக்ரம் பெற்று மகரம் ராசிக்கு திரும்புகிறார்.

தை அமாவாசை நாளில் எட்டாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சில சிக்கல்கள் வரும். வதந்திகள் அதிகம் வரும் கவனம் தேவை. சொத்து தகராறு வரும் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலை விசயங்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம் தடைகள் வரலாம், உடல் ஆரோக்கியம் தொடர்பாக செலவுகள் வரலாம்.

எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்து விரட்டுங்கள். நேர்மறை எண்ணங்களை அதிகம் மனதில் நினைத்தாலே வெற்றி கிடைக்கும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இந்த மாதத்தில் பொறுமையும் நிதானமும் தேவை. பெண்கள் வீட்டில் அமைதியாக இருப்பது நல்லது. உறவுகளுக்குள் சிக்கல்கள் வரலாம்.

தேவையில்லாத செலவுகளை குறைக்கவும். வெளியூர் பயணங்களில் சிக்கல்கள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர்களுக்குள் பிரச்சினைகள் வரலாம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். இருக்கிற வேலையில் கவனம் தேவை.

திருமணம் சுப காரியம் தொடர்பாக இந்த மாதம் எந்த பேச்சுவார்த்தைகள் வேண்டாம். இந்த மாதம் சோதனைகள் அதிகம் வரும் விழிப்புணர்வோடு எதிர்கொண்டு அதை சாதனைகளாக மாற்றுங்கள். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டிய மாதம். கிடைக்கும் வேலையை கவனமாக செய்வது நல்லது. மாணவர்கள் செல்போனை கவனமாக கையாளுவது நல்லது. வியாபரிகள் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.

கூட்டுத்தொழில் செய்பவர்கள் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செய்வது நல்லது. புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு போய் வழிபடுவது நல்லது. மகாவிஷ்ணுவின் மந்திரங்களை சொல்லி துளசி மாலை சாற்றி வணங்கவும் நன்மைகள் நடைபெறும். கடகம் சுக்கிரன் ஏழாம் வீட்டிற்கு வந்து உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பு. ஏழாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவது நன்மையை கொடுக்கும். ஆட்சி பெற்ற சனியோடு கிரகங்கள் இணைந்து உங்கள் ராசியை பார்வையிடுகின்றன. பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை.

சுப செலவுகள் வரும். சகோதரர் சகோதரிகள் மூலம் சில பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. சிக்கல்கள் வரலாம் கவனம் தேவை. வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உயர்பதவியில் இருப்பவர்கள் கவனம் தேவை. குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி தேடி வரும். திடீர் வருமானம் வரும். அரசியல்வாதிகளுக்கு யோகம் நிறைந்த மாதம்.

மன குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். பெண்களுக்கு வீட்டில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். வீட்டில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சந்தோஷ நிகழ்வுகள் அதிகம் நடைபெறும். மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்யும். அரசு வேலைக்காக தேர்வுகள் எழுதுங்கள் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு யோகமான மாதம்.

பாராட்டு அதிகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெரிய மனிதர்களின் தொடர்பினால் நன்மைகள் நடைபெறும். உணவு விசயங்களில் கவனம் தேவை. காரமான எண்ணெய் பலகார உணவுகளில் கவனம் தேவை. அதிகம் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். நரம்பு பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். தை பூசம் நாளில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். அன்னதானம் செய்வது சிறப்பை கொடுக்கும்.

சிம்மம் சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே. உங்க ராசி நாதன் சூரியன் ஆறாம் வீட்டில் குரு, சனி, புதனுடன் இணைந்து பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய மாதம். பணம் வரவு அதிகமாக இருக்கும் கூடவே வீண் விரைய செலவுகளும் வரும். இளைய சகோதரர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும் கவனம் தேவை.

குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் கவனம் தேவை. எந்த செயலை செய்வதற்கு முன்பும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செய்வது நல்லது. புதிய முதலீடுகள் எதுவும் இந்த மாதத்தில் வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். அரசியல் ஈடுபாடு செய்பவர்களுக்கு பொறுமை அவசியம். குடும்ப உறவுகளிடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்லவும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு உயரதிகாரிகளால் தொல்லைகள் வரலாம் கவனம் தேவை. வேலை விசயத்தில் சில குழப்பங்கள் வரலாம். திருமண சுப காரியங்கள் தொடர்பாக இந்த மாதம் எதுவும் முயற்சி செய்ய வேண்டாம். கடன் பிரச்சினைகள் அதிகரிக்கலாம் இந்த மாதம் பொறுமையும் நிதானமும் தேவை. பெண்கள்,இல்லத்தரசிகள் குடும்பத்தில் கவனமாக இருப்பது நல்லது.

ஆறாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால் நிதானம் தேவை. எதிரிகள், கடன் தொல்லைகள் நீங்கவும் பயம் நீங்கி நன்மைகள் அதிகரிக்கவும் தை அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும். விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும். கன்னி புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேது நான்காம் வீட்டில் சுக்கிரன், ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன், சனி, குரு, புதன் என நான்கு கிரகங்கள் கூடியுள்ளன.

எட்டாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளதால் பதவியில் மாற்றம் வரும். புதன் வக்ரமடைவதால் கவனமும் நிதானமும் தேவை. பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் வரும். வெளிநாடு முயற்சிகளை தவிர்த்து விடவும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. வேலைகளில் பிரச்சினைகள் வரலாம்.

பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல் ஈடுபடு செய்பவர்கள் கவனமும் எச்சரிக்கையும் தேவை. அப்பா வழி உறவினர்களால் சிக்கல்கள் வரலாம் கவனம் தேவை. உடல் ரீதியான பாதிப்புகள் வரலாம் சோர்வு ஏற்படும். நண்பர்கள் விசயத்தில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. புதிதாக யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

மாணவர்களுக்கு இந்த மாதம் ஞாபகமறதி பிரச்சினைகள் வரலாம், படிப்பு விசயத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். புதன்கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடவும் தை அமாவாசை நாளில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைகின்றன. அன்றைய தினம் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை நினைத்து விளக்கேற்றி வழிபடவும்.

நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US