இந்த பானம் குடிங்க - உடலில் இருக்கும் கெட்ட வாயு 2 நிமிடத்தில் வெறியேறும்
வயிற்றில் உள்ள வாயுவை அப்படியே வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்தும் இரண்டு பானங்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றாம்.
வாயுவை சுத்தப்படுத்தும் வீட்டு வைத்தியம்
நாம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவசர அவசரமாக சாப்பிடும் போது மற்றும் காபி டீயை உறிஞ்சிக் குடிக்கும் போது நம்மை அறியாமலே உடலுக்குள் உணவுடன் சேர்த்து வாயுவும் செல்கிறது.
இந்த காற்று 80 சதவீதம் இரைப்பையில் இருந்து வாய் வழியாக வருகிறது. மீதி ஆசன வாய் பகுதியால் வருகிறது. இதனால் பலருக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தும். இப்போது இந்த வயிற்றில் இருக்கும் வாயுவிற்கு ஒரு சிறந்த வீட்டு வைத்திய பானத்தை பார்க்கலாம்.
பானம் 1
ஒரு அளவான கிளாஸை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் வெதுவெதுப்பான தண்ணீர் முக்கால் கிளாஸ் அளவிற்கு ஊற்றி ஒரு சிட்டிகை பெருங்காய தூள் போட வேண்டும்.
இந்த பெருங்காய பொடி குடலில் இருக்கும் பாக்டீரியாக்களை தடுத்து வாயுவை வெளியேற்ற உதவும். இந்த தண்ணீரில் தேவையான அளவு இந்து உப்பு சேர்க்க வேண்டும்.
இந்து உப்பு இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம் இல்லை என்றால் சாதாரண உப்பு சேர்த்துககொள்ளலாம்.
அவ்வளவு தான் இந்த பானத்தை நன்றாக கலந்து விட்டு வாயு தொல்லை இருக்கும் நேரத்தில் குடித்து வந்தால் வாயுத்தொல்லை உங்களை விட்டு விலகுவதை நீங்கள் உணர்வீர்கள்.
வாயுத்தொல்லை இன்னும் அதிகமாக இருக்கும் நபர்கள் ஒரு பாதி அளவு எலுமிச்சையை எடுத்து ஏற்கனவே தயார் செய்த பானத்தில் பிளிந்து விட வேண்டும்.
இதனுடன் இரண்டு கிராம்பையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் வாயுத்தொல்லை இல்லாமல் போகும்.
பானம் 2
வாயுப்பிரச்சனையை அடிக்கடி சந்திக்கும் நபர்கள் ஒரு பொடியை வீட்டில் எப்போதும் தயார் செய்து வைக்க வேண்டும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் 4 ஸ்பூன் ஓமம்,இரண்டு ஸ்பூன் ஜீரகம்,ஒரு துண்டு சுக்கு,உப்பு சேர்த்து வாசனை வரும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.
வறுத்த அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அசிடிட்டி போன்ற கடுமையான வாயுத்தொல்லை இருக்கும் போது ஒரு கிளாசில் வெதுவெதுப்பான நீர் எடுத்து அதில் இந்த பொடி ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் வாயுத்தொல்லை இல்லாமல் போகும்.
வாயு நம் உடலை விட்டு வெளியேறும் போது எந்த வித வாடையும் இல்லாமல் வெளியேறினால் அது நன்று. அப்படி இல்லாமல் அது நாற்றத்துடன் வெளியேறினால் உடலில் ஏதோ கோளாறு உள்ளது என அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |