இன்றைய தங்க விலையில் மாற்றம்! நிம்மதி பெருமூச்சுவிட்ட பெண்கள்
சமிபக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை கடகடவென உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்த நிலை ஏற்பட்டதால் யூரோவின் பெறுமதி டாலருக்கு இணையான மதிப்பில் இருந்தது.
இதனால் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் தங்க ஆபரணங்கள் கொள்வனவில் சற்று சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது யூரோவின் பெறுமதியின் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை
இதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,850 என்றும், 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 38,800 ஆகவும் உள்ளது. மேலும் இன்று சவரனுக்கு ரூ.160 வாக குறைந்துள்ளது.
24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,290 என்றும், சவரனுக்கு ரூ.42,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்று சவரனுக்கு ரூ.136 வாக குறைந்துள்ளது.
இது போன்று, சென்னையில் இன்றைய தினம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.66.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.66,500க்கு வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.