பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் வேலையை காட்டிய பிரபலம்! இது தான் ஜனனி இன்னும் வரவில்லையா?
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் அசீம் மகேஷ்வரியை கேவலமாக பேசியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் இந்த சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் அதிகமாக சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளார்கள். இதனால் இந்த சீசன் அதிகமாக மக்கள் மத்தியில் அதிகமான ரீச் ஆகியுள்ளது.
மேலும் பிக் பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்துள்ளனர்.
மீண்டும் பிக் பாஸ் வீட்டினுள் குவிந்த பிரபலங்கள்
அந்த வகையில் எலிமினேட் ஆகாமல் தானாக வெளியேறிய ஜிபி முத்துவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். மேலும் அசல் கோளாறும் நிவாஸினியிடம் சற்று நெருக்கமாக பழகினார். இதன் காரணமாக முதலில் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து இரண்டு வாரங்களின் பின்னர் குறைவான வாக்குகளால் நிவாஸினி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்களில் ஜனனி உட்பட அணைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
ஜனனி ஏன் இன்று வரை பிக் பாஸ் வீட்டிற்குள் வரவில்லை என தெரியவில்லை. மேலும் ஜனனி இலங்கையில் இருக்கிறாரா? அல்லது இந்தியாவில் இருக்கிறாரா என்பது குறித்து சந்தேகித்து வருகிறார்கள்.
இதன்படி, இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டிற்குள் மகேஷ்வரி வருகை தந்துள்ளார். வந்தவுடன் ஒரு டாஸ்க்கை போட்டியாளர்களுக்கு வழங்கியுள்ளார்.
புதிய டாஸ்க்
அதில் விக்ரமன் கிளின் சேவ் செய்ய வேண்டும் என்றும் அசீம் புடவை அல்லது சாரிக் கட்டிக்க வேண்டும் என தனலெட்சுமி டாஸ்க்கை விளக்கியுள்ளார்.
இந்த டாஸ்க் கொடுத்தது மகேஷ்வரியின் சூழ்ச்சி என நினைத்தப்படி அசீம் குறித்த டாஸ்க்கு ஓப்புக் கொள்ள மறுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து மகேஷ்வரி இந்த காரணத்திற்காக தான் வெளியேறினார் என அசீம் சுட்டிகாட்டியுள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.