காதலின் வலி தாங்க முடியாமல் கதறி அழுத ஷிவின்! கண்கலங்க வைத்த காட்சி
பிக் பாஸ் வீட்டில் காதல் தோல்வியால் சக போட்டியாளர்கள் முன்பு சிவின் கணேஷன் கதறி அழுதுள்ளார்.
கடந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி காலக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் இந்த போட்டியிலிருந்து சுமார் 10 போட்டியாளர்களுக்கு மேல் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதன்படி, பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக காணப்பட்ட தனலெட்சுமி வெளியேற்றப்பட்டார்.
இவர் தான் பிக் பாஸ் சீசன் 6 ன் சுவாரஸ்யமான போட்டியாளர் என ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளபட்டவர்.
டிஆர்பிக்காக வெளியேற்றப்பட்ட இலங்கை பெண்
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தன்னுடைய டிஆர்பி ரேங்குக்காக முக்கிய போட்டியாளர்களை வெளியேற்றி வருகிறது.
இதனால் ஜனனி மற்றும் தனலெட்சுமி இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஜனனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அழகான போட்டோக்களை எடுத்து பகிர்ந்து வருகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ரொக்கமாக சம்பாதித்து வருகிறார்.
காதலின் வலி தாங்க முடியாமல் அழுது புலம்பிய தருணம்
இந்நிலையில் இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் கதிரவனின் காதலியும் அம்மாவும் அவரை பார்வையிடுவதற்காக ப்ரீஸ் டாஸ்க்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சிவின் கணேஷன் மன உளைச்சல் அதிகமாகி அழ ஆரம்பித்துள்ளார்.
இதனை பார்த்த அமுதவாணன் மற்றும் விக்ரமன் இருவரும் வினவிய போது பதிலளிக்காமல் விலகி சென்றுள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.