பிக் பாஸ் வீட்டில் கட்டபஞ்சாயத்து வேண்டாம்! கடுமையாக கண்டிக்கும் போட்டியாளர்.. பரபரப்பான ப்ரோமோ
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் சண்டைகள் மீண்டும் சூடி பிடித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் சீசன் 6 மற்றைய சீசன்களை விட தற்போது விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
மேலும் வாக்குகள் அடிப்படையில் சுமார் 10 மேற்பட்ட பிரபலங்கள் வாக்குகளில் குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் தற்போது வீட்டிலிருக்கும் அசீம், தனலெட்சுமி, விக்ரமன், சிவின், ஏடிகே போன்றவர்களின் வாக்குவாதங்களில் எல்லையில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது.
ஜனனி வெளியேற்றம்
இதனை தொடர்ந்து கடந்த வாரம் பெண்களில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து ஜனனி வெளியேற்றப்பட்டுள்ளார்.
மேலும் பிக் பாஸின் தொகுப்பாளர் கமல் அவர்கள் ஜனனி குறைவான வாக்குகள் பெற்றுள்ளதாக மேடையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கான சான்றுகள் இனிவரை வெளிவரவில்லை மேலும் டிஆர்பி ரேங்கிற்காக பிரபல தொலைக்காட்சி வெளியேற்றிக்கலாம் என ரசிகர்கள் சந்தேகித்த வருகிறார்கள்.
கடுப்பான அசீம்
இந்நிலையில் பிக் பாஸ் வீடு சுமார் 70 நாட்களை கடந்துள்ளதால் யார் வெற்றியாளன் என்ற போட்டி அதிகரித்துள்ளது.
மேலும் அமுதவாணன் மற்றும் அசீம் இடையிவலான சண்டைகள் கடந்த வாரம் முடிவுற்ற நிலையில் விக்ரமன் இன்றைய தினம் அது தொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதனால் கடுப்பான அசீம் பிக் பாஸ் வீட்டில் கட்டபஞ்சாயத்து பண்ண வேண்டாம் என கண்டித்துள்ளார்.
அந்த வகையில் பிக் பாஸில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது.