அசீமுடன் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது..! முக்கிய போட்டியாளர் குற்றஞ்சாட்டு
பிக் பாஸ் வீட்டிற்கும் அசீம் நேரத்திற்கு ஏற்றால் போல் மாறி மாறி நடந்துக் கொள்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அசீம் சின்னித்திரை பயணம்
சின்னத்திரையில் பிரபல்யமான நடிகராக திகழ்ந்து வரும் அசீம், இந்த சீசனில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேகரித்து வைத்துள்ளார் என்றே கூற வேண்டும்.
இவர் தன்னுடைய முன் கோவத்தால் சக போட்டியாளர்களுடன் அடிக்கடி சண்டைகள் போடுவார். ஆனாலும் இவருக்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
சமீபக்காலமாக அசீம் தான் டைட்டில் வின்னராக இருப்பார் என பலரும் கூறிவருகின்றனர்.
இந்த வாரத்துடன் சுமார் 6 வாரங்கள் நாமினேஷனுக்கு தெரிவான அசீம், ஒவ்வொரு வாரமும் சேவ் செய்யப்பட்டு வருகிறார்.
அசீமின் கொள்கையை புட்டு புட்டு வைக்கும் பிரபல போட்டியாளர்
இந்நிலையில் அசீம் சற்று வேறுவிதமாக இருப்பதாக ஏடிகே குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மேலும் அசீமுடன் வீட்டிலிருக்க பிடிக்கவில்லையென்றும் அசீம் மாறி மாறி நடந்துக் கொள்வதால் அவருடன் பழக பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.