சக போட்டியாளர்களுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்: கோபத்தில் கத்திய அசீம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்கில் தனலெட்சுமி சக போட்டியாளர்களுடன் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய பிரபலங்கள் பங்கேற்பு
பிரபல தொலைக்காட்சியில் பல கோடி ரசிகர்களால் அதிகமாக வரவேற்கப்படும் நிகழ்வாக பிக்பாஸ் பார்க்கப்படுகிறது. இதில் பல தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். பின்பு புதிய போட்டியாளராக மைனா நந்தனி இணைந்துக் கொண்டார். அப்பொழுது மொத்தமாக 21 போட்டியாளர்கள் காணப்பட்டார்கள்.
குற்றம் சுமத்தும் அசீம்
இதனை தொடரந்து கடந்த வாரம் ஜிபி முத்து சில தவிர்க்க முடியாத காரணங்களாலும், சாந்தி மக்களாலும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மூன்றாவது வாரம் 19 போட்டியாளர்களுடன் நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் பொம்மையுடன் தொடர்புபட்ட புதிய டாஸ்க்களை பிக் பாஸ் கொடுத்து வருகிறார்.
இதில் சக போட்டியாளர்களுடன் தனலெட்சுமி மிகவும் கடுமையாக நடந்துக் கொள்வதாக அசீம் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
How to irritate the clown ? #Azeem guidebook!!#Dhana thug life ????#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/FVb2FIiReO
— Raja (@whyrajawhy) October 26, 2022