திருமணம் ஆன ஒரே நாளில் மணமகனை தூக்கி எறிந்த மணப்பெண் - இப்படி ஒரு காரணமா?
திருமணமான ஒரே நாளில் மணப்பெண் மணமகனை வேண்டாம் என கூறிய சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி தெருவைச் சேர்ந்த 32 நபர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மணமகன் அதே ஊரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இருவரின் வீட்டிலும் கல்யாண ஏற்பாடுகள் நடந்து வந்திருக்கின்றன.
இதனையடுத்து கடந்த நாளில் இருவீட்டார், நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. அப்போது, திருமணம் முடிந்த பின் வரவேற்பு நடைபெற்றது.
அறுவை சிகிச்சை
இந்த வரவேற்பு விழாவில் உள்ளூர் மக்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். அப்போது, இருவருக்கும் அவர்களுடைய உறவினர்கள் சீர்வரிசை செய்தபோது, மணமகனின் காலை பார்த்த இளம்பெண் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
மாப்பிள்ளையின் 2 கால்களில் ஒரு கால் மட்டும் வித்தியாசமாக இருப்பதை அறிந்த இளம்பெண் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதற்கு மணமகன் பணியின்போது விபத்தில் காலில் அடிபட்டதாகவும், அதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் மணமகன் தெரிவித்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் தன்னிடம் முன்பே ஏன் இதுகுறித்து தெரிவிக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

கலபரமான திருமணம்
இதனைத்தொடர்ந்து, கல்யாண மண்டபமே பரபரப்பு ஏற்பட, இருவீட்டாரும் மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், இந்த திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை எனக்கூறியிருக்கிறார்.
இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். பின், திருப்பூர் கொங்குநகர் சரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு இருவீட்டார் சென்றிருக்கின்றனர்.
அப்போது மணமகனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ததை மறைத்துவிட்டதாக மணமகள் மற்றும் அவரது வீட்டினர் தெரிவித்துள்ளனர்.
பிரிவு
போலீசார் நடத்திய விசாரணையில், இறுதியில் இருவரும் பிரிந்து செல்ல ஒப்புக்கொண்டனர்.
மேலும், இரு குடும்பத்தினரும் தனித்தனியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
திருப்பூரில் திருமணம் நடந்த அன்றே மணமக்கள் பிரிந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.