காலையில் எழும்பும்போது சோர்வாக இருக்கின்றீர்களா? இந்த 4 பழக்கங்கள் தான் காரணம்
பொதுவாக மனிதர்கள் இரவில் தூங்குவதைப் பொறுத்து தான் மறுநாள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். நீங்கள் தூங்கி எழும்போது நீங்கள் சோர்வாக இருந்தால் அதற்கு சில காரணங்கள் உள்ளது. இந்த பழக்கங்களை மாற்றிக்கொண்டால் தூங்கி எழும் போது சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
காலை எழுந்திருக்கும் போது சோர்வாக இருக்க காரணம்?
நீலக்கதிர்கள் உங்களின் தூக்கத்தினைக் கெடுக்கின்றது. இதற்கு காரணம் தூங்கும் முன்பு நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்கள் ஆகும். இவற்றினால் வரும் நீலக்கதிர்கள் உங்கள் தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை கட்டுப்படுத்தும் மெலடோனின் எனும் ஹார்மோனை பாதிக்கின்றது.
இரவில் படுக்கும் முன்பு அதிகமான காபி, சாக்லேட், மது, அதிகமான நீரை அருந்துதல் போன்ற பொருட்களை உட்கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில் தண்ணீர் அதிகமாக பருகினால் சிறுநீர் கழிக்க இடையே எழும்பும் நிலை ஏற்படுவதால் தூக்கம் பாதிக்கும்.
காபி சாக்லேட் போன்ற பொருட்கள் மூளையை விழிப்போடு வைத்திருந்து நீண்ட நேரம் நம்மை தூங்கவிடாமல் வைக்கின்றது.
காலையில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இரவில் நீங்கள் தூங்கும் இடம் மிக முக்கியமாகும். அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்ற படுக்கையை நீங்கள் பயன்படுத்தினால் சோர்வு மட்டுமல்ல வலியும் ஏற்படாமல் இருக்கும்.
இரவில் தூங்கும் போன்று குரட்டை விடுவது ஒருவகை தூக்க டிஸார்டரின் அறிகுறியாகவே இருக்கின்றது. குறிப்பாக இன்சோமியா, தூக்கத்தில் நடக்கும் வியாதி, தூக்கத்தில் சுவாசம் தடைபடுவது போன்ற பிரச்சினையை சந்தித்தால் காலையில் எழும்பும் போதும் அதிக சோர்வாகவே இருக்குமாம்.