திருமணத்தில் நைட் சூட் கேட்ட இந்திய மணப்பெண்! ஏன் தெரியுமா?
திருமண நாளில் நைட் சூட்டிற்கு ஆசைப்படும் மணப்பெண் ஒருவரின் பரிதாப காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்திய பெண் ஒருவர் தனது வசதியான நைட்வேர்களை அணிந்து கொண்டு அனைத்து திருமண சடங்குகளையும் முடிக்க விரும்புவதாக கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், திருமணத்தில் ஃபெராஸ் எனப்படும் திருமண நிகழ்வுக்கு முன்பே களைத்து போன மணப்பெண் சோகமாக இருக்கின்றார்.
அவரிடம் வீடியோ எடுத்து கொண்டிருக்கும் அவரது சகோதரி இன்னும் கப்புல் போட்டோஷூட் உட்பட சில போட்டோஷூட்கள் எடுக்க வேண்டும் என்கிறார் எனினும் மணமகள் திருமண சடங்குகள் முடிவடைவதை மட்டுமே விரும்புவதை மிகவும் சோர்வுடன் வெளிப்படுத்துகிறார்.
சோர்வுடன் களைப்பாக அழும் தொனியில் பதிலளிக்கும் மணமகள் இந்த நேரத்தில் எனக்கு நைட் சூட் (இரவு உடை) தேவை என்று பதில் அளித்தார்.
தனது சூப்பர் வசதியான நைட் ஆடையில் திருமண சடங்குகளை முடிக்க விரும்பும் அர்த்தத்தில் கூறிய மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.