எடுத்த காரியத்தில் வெற்றி! இந்த இரண்டு பொருட்களில் விளக்கு போட்டால் போதும்
வெற்றி நிச்சயம் பொதுவாக நம்மில் சிலருக்கு நீங்காத பல பிரச்சினைகள் இருக்கும்.
அப்போது என்ன செய்வது என தெரியாமல் சில வேலைகளை நாம் செய்துக் கொண்டிருப்போம்.
அந்த வகையில் நம்முடைய முன்னோர்கள், “தூய்மை மற்றும் நல்ல மனம் இருந்தால் அங்கு தெய்வ சக்தி இருக்கிறது என அர்த்தம்” என்பார்கள்.
இதனை தொடர்ந்து அழுக்கான இடங்களில் கடவுள் எப்போது தங்கமாட்டார்கள் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.
இதனால் தான் காலையிலும் மாலையிலும் வீடுகளில் விளக்கு ஏற்றி வைத்து, நறுமண பொருட்கள் ஏற்றுகிறார்கள்.
இவ்வாறு துய்மையாக இருக்கும் போது நாம் நினைத்த காரியம் சில சமயங்களில் நினைவேறும்.
நினைத்த காரியம் நினைவேற..
1. பூஜை அறையில் ஒரு காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுதல்.
2. எண்ணெய் ஊற்றி பூ வைத்து விளக்கு ஏற்றுதல்.
3. அதனுடன் அகல் விளக்கும் உடன் ஏற்றுதல்.
இதனையும் தாண்டி நம் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்றால் அதற்கு இந்த இரண்டு பொருட்கள் தான் சரி. ஆகவே அந்த பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
கிராம்பு மற்றும் பச்சை கற்பூரம்
முதலில் இனிப்பு மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை எடுத்து நன்றாக பொடித்து கொள்ள வேண்டும்.
இதனுடன் கிராம்பை சேர்த்து பொடியாக்கி அதில் தீப விளக்கு போட்டால் நினைத்த காரியம் நடக்கும்.
நன்மைகள்
1. வீட்டிலுள்ள குறைகள் நீங்கும்.
2. நன்மைகள் நம் வீட்டை சுற்றி சுற்றி வரும்
3. நினைத்த காரியம் தொடர்ந்து செய்தால் கிடைக்கும்.