கரப்பான் பூச்சியை தலைதெறிக்க ஓட விடனுமா.... இதை மட்டும் செய்யுங்க! நீங்க இருக்கும் திசைக்கு இனி வராது?
கரப்பான் பூச்சிகளை பார்த்தாவே அருவெறுப்பாக இருக்கும்.
உணவுகளில் ஏறினால் பல உடல்நல கேடுகளை உண்டாக்க கூடும்.
அதனால் வீட்டையும் எம்மையும் கரப்பான் பூச்சிகளிடம் இருந்து எப்படி பாதுகாப்பது என்பதை பார்க்கலாம்.
- வெந்நீர் - 1 லிட்டர்
- எலுமிச்சை - பெரியது 1
- பேக்கிங் சோடா - 4 டீஸ்பூன்
வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பேக்கிங் சோடா கலந்து நன்றாக குலுக்கி எடுக்கவும்.
இந்த நீரை கிச்சன் மேடை, சிங்க், கீழ் உள்ள பகுதிகளை சுற்றி கழுவவும்.
கரப்பான் பூச்சி அதிகமாக இருந்தால் தினமும் மூன்று வேளை இதை செய்யவும். தொடர்ந்து செய்து வந்தால் கரப்பான் பூச்சி வெளியேறுவதோடு அதன் இனப்பெருக்கமும் தடுக்கப்படும்.
அதனோடு மற்ற பூச்சிகளும் வராமல் இருக்கும்.
இதேவேளை, வெதுவெதுப்பான நீரை எடுத்து வெள்ளை வினிகர் சம அளவு கலந்து கொள்ளவும். சமைத்து முடித்ததும் கேஸ் அடுப்பை இந்த கரைசல் உள்ள இடத்தில் விட்டு சுத்தம் செய்யவும்.
எஞ்சியிருக்கும் கலவையை சிங்க் பகுதியில் ஊற்றிவிடவும்.
இது குழாய்கள் மற்றும் வடிகால்களை கிருமி நீக்கம் செய்து கரப்பான் பூச்சிகளை வெளியேற்றுகிறது. இந்த இரண்டு முறைகளை பின்பற்றினாலே போதும் கரப்பான் பூச்சியை மட்டும் இல்லை இதர பூச்சிகளையும் ஓட ஒட விரட்டி அடிக்கலாம்.