30 நாட்களில் இடுப்புக்கு கீழ் தலைமுடியை வளர வேண்டுமா? அப்போ இந்த பேஸ்ட் தடவினால் போதும்
பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள் பெண்கள் என இருபாலாருக்கும் தலைமுடி உதிர்வு பெறும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
இந்த பிரச்சினை அதிகமான இரசாயனம் கலந்த ஷாம்பூக்கள் , ஹேர் கலரிங், இரசாயன எண்ணெய் பயன்பாடு என்பவற்றால் ஏற்படுகிறது.
இவ்வாறு பிரச்சினைகள் ஆரம்பத்தில் கட்டுபடுத்தாவிட்டால் காலப்போக்கில் தலைச் சொட்டையாக்கி விடும். கொட்டிய தலைமுடி மீண்டும் நன்கு வளர என்ன செய்யலாம்? என பல கேள்விகள் இருக்கும்.
அந்த வகையில் சுமார் 30 நாள் காலப்பகுதியில் தலைமுடி உதிராமல் கட்டுப்படுத்தும் வெந்தயம் கலந்த பேஸ்ட் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம்
- கற்றாழை ஜெல்
- தயிர்
தயாரிப்பு முறை
1. முதலில் தலையில் இருக்கும் முடியின் அளவுக்கேற்ப வெந்தயத்தை எடுத்து சுமார் 24 மணித்தியாலங்கள் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை நன்கு ஒரு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
2. அந்த கலவையில் ஒரு கரண்டி அளவு கற்றாழை ஜெல் மற்றும் தயிர் ஒரு கரண்டி ஆகியவற்றை சேர்த்து மீண்டும் அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பாவனைமுறை
தலைக்கு குளிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் தலையில் எண்ணெய் வைத்து நன்கு தலைமுடியை காய விட வேண்டும். பின்னர் குளிக்கும் போது இந்த கலவையை பூசி நன்கு தலைமுடியை அலச வேண்டும்.
இவ்வாறு மாத்திற்கு மூன்று தடவைகள் செய்யலாம், இதனால் தலைமுடி வேகமாக வளர ஆரம்பிக்கும்.