நீங்காத பாத்திர கறையை இலகுவாக போக்க அருமையான சில டிப்ஸ்! இனி கவலை வேண்டாம்
பொதுவாக நமது வீடுகளில் பண்டிகை தினங்களுக்கு சமைக்கும் பாத்திரங்கள் அடியில் அதிகம் கறை பிடித்தது போன்று இருக்கும்.
இவ்வாறு இருப்பதால் மீண்டும் அந்த பாத்திரத்தை சமைக்க பயன்படுத்தும் போது அது திருப்தியின்மையை ஏற்படுத்தும். கழுவாமல் தொடர்ந்து சமைத்து வந்தால் நாளுக்கு நாள் கறை அதிகமாகிக் கொண்டே செல்லும்.
இவ்வாறு கறையை போக்க சாதாரண சவர்க்காரம் பயன்படுத்தினால் இலகுவில் கறை போகாது, நாம் என்ன தான் சுத்தமாக கழுவினாலும் கறை இருந்து கொண்டே இருக்கும்.
அந்த வகையில் பாத்திரங்களிலிருக்கும் நீங்காத கறைகளை எவ்வாறு அகற்றுவது என்பது தொடர்பில் தெளிவாக பார்க்கலாம்.
கறைகளை இலகுவாக போக்கும் டிப்ஸ்
1. பாத்திரங்களில் கறையால் நிரம்பி விட்டால் நன்றாக கொதிக்க வைத்த வெந்நீரை அந்த பாத்திரத்தினுள் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின்னர் சோப்பு வைத்து சுத்தம் செய்தால் கறை இருந்த இடம் தெரியாமல் மாறிவிடும்.
2. ஒரு கப் வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சீடார் வினிகர் சேர்த்து கறையிலுள்ள பாத்திரத்தை சுமார் 24 மணி நேர்திற்கு ஊற வைத்து விட்டு கழுவினால் கறை மாறும்.
3.நீங்காத கறைக் கொண்ட பாத்திரங்களை அடுப்பில் வைத்து அதில் ஒரு கைபிடி அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு கொதிக்க வைக்கும் உப்பிலுள்ள சில பொருட்களை கறை நீக்க உதவியாக இருக்கும்.
4. பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் வெங்காயம் தோலை சேர்த்து சுமாராக 30 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த நீரை எடுத்து பாத்திரத்தை கழுவினால் தேய்த்து கழுவினால் கறைகள் மாறும்.
5. இவ்வாறு செய்வது கடினம் என்றால் கார்போஹைட்ரேட் நிறைந்த சோடாக்களை பாத்திரத்தில் ஊற்றி வைத்து பின்னர் கழுவினால் கறை நொடிப் பொழுதில் மறையும்.
6. ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து புளி கரைசல் தயார் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து கறையிலுள்ள பாத்திரத்தில் ஊற்றிக் கழுவலாம்.
7.கேக் போடுவதற்கு பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடாவை பாத்திரங்கள் கழுவும் போது பயன்படுத்தினால் கறைகளை இலகுவாக போக்கலாம்.