வீட்ல எலித் தொல்லை பாடாய்படுத்துதா !அப்போ இந்த ஈஸி டிப்ஸ பாலோ பண்ணி பாருங்க! 1 கூட தப்பிக்காது!
வீடகளில் எலித்தொல்லை என்பது அதிகமாக இருக்கும் நிலையில் இதனை அடியோடு விரட்டுவதற்கு சில குறிப்புகளை இங்கு காணலாம்.
எலித்தொல்லை
வீடுகளில் நாம் வாங்கி வைத்திருக்கும் காய்கறிகள், உணவுப்பொருட்கள் என அனைத்தையும் எலிகள் நாசம் செய்துவிடும். இவை வீடுகளில் மட்டுமின்றி கடைகள் மற்றும் அலுவலகங்கள் என்றும் உண்டு.
இவ்வாறு எலித்தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு சில வழிமுறைகளை, அதாவது எலிப்பொறி, எலி மருந்து என்பதை நாம் பயன்படுத்தினாலும் இதில் முழுவதுமான பலனை நாம் பெற முடியாது. ஆதலால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து நாம் முற்றிலுமாக விரட்டிவிடலாம்.
பெப்பர்மிண்ட் ஆயில் :
புதினா வாசனை எலிகளுக்கு சுத்தமாக பிடிக்காது. ஆகையால் சிறிய துணி ஒன்றில் பெப்பர் மிண்ட் ஆயிலை தெளித்து, இதனை எலி நடமாடும் இடங்கள் அதாவது, மூலைகள், எலிப்பொந்துகள் என்று வைத்துவிடவும்.
இவ்வாறு 2 தினங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றினால், எலித்தொல்லை முற்றிலும் அழிவதுடன், நறுமணத்தினால் வீடும் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
வெங்காயம்
வெங்காயத்தின் கடுமையான வாசனை மனிதர்களுக்கு மட்டுமின்றி, எலிகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இவ்வாறு வெங்காயத்தினை வெட்டி வைப்பதையும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.
ஏனெனில் வெங்காயம் விரைவில் அழுகிவிடும் என்பதால், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
பூண்டு
பூண்டை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரை, ஸ்பிரே போத்தல் ஒன்றில் வைத்து மூலைகள், துவாரங்கள் என்று அனைத்து இடத்திலும் தெளித்துவிடவும்.