நீங்கள் சிறந்த மனைவியா? அப்படினா இது உங்களுக்கானதே...
கணவன் - மனைவி என்ற பந்தம் அனைத்து உறவுகளையும் விட சற்று வித்தியாசமானது.
எங்கோ பிறந்து, வளர்ந்து, திடீரென சந்தித்து, ஒருவருக்கு ஒருவர் பிடித்துப்போய் திருமண பந்தத்தில் இணைகின்றனர்.
திருமண பந்தத்தில் இணைவது பெரிதல்ல. அதை எவ்வாறு வெற்றிகரமாக நடாத்திச் செல்கின்றோம் என்பதில்தான் முழுமையான வெற்றி இருக்கின்றது.
image - Family today
சிறந்த ஜோடியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்காக என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமல் சிலர் இருக்கின்றனர்.
அந்த வகையில் சிறந்த திருமண வாழ்க்கையை நடாத்திச் செல்ல மனைவி என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இந்தப் பதிவு அறியத் தருகிறது...
image - crosswalk.com
பாராட்ட வேண்டும்
கணவர் செய்தது சிறிய வேலையாக இருந்தால்கூட அதை பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். பாராட்டுக்கள் ஒருவரை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும்.
கணவருக்கும் இடம் கொடுங்கள்
தொழில் முடித்து வீடு திரும்பியவுடன் அவர் முழு நேரத்தையும் உங்களுடனேயே செலவிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவருக்கு தனிமை தேவைப்படம் சந்தர்ப்பங்களில் அவருக்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்.
image - Bonobology.com
விமர்சனம்
பொதுவாக விமர்சனங்கள் ஒருவரை கோபமடையச் செய்யலாம். எனவே கணவர் செய்யும் சின்னச் சின்ன விடயங்களையெல்லாம் விமர்சித்துக் கொண்டிருக்க வேண்டாம்.
நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்க விடுங்கள்
எந்நேரமும் உங்களுடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட அனுமதியளியுங்கள். நண்பர்களுடன் இருப்பது அவர்களுக்கு சற்று உற்சாகத்தை ஏற்படுத்தும்.
கணவரின் தேவையை அறிந்து கொள்ளுங்கள்
கணவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதைப் பற்றி தெரிந்து நடந்து கொள்ளுங்கள். உதாரணத்துக்கு அவருக்கு ஓய்வு தேவைப்படும் நேரத்தில் நீங்கள் வெளியே சென்றாக வேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடாது.
image - Firstcry parenting